கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு – சென்னையில் 36 தெருக்களுக்கு ‘சீல்’

சென்னையில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 1.4 சதவீதம் அதிகரித்தது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அண்ணாநகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 12 தெருக்களுக்கும், ஆலந்தூரில் 10 தெருவுக்கும், வளசரவாக்கத்தில் 7 தெருவுக்கும், சோழிங்கநல்லூரில் 3 தெருவுக்கும், கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலத்தில் தலா ஒரு தெருவுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.