ஆண்களே உஷாரா இருங்க..! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!!
![](https://thambattam.com/storage/2020/08/sick-man-flu-virus-cold-illness-780x470.jpg)
கொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோரில் 69% பேர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 32,34,475 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 1,059 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 59,449 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 63,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 24,67,759 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 7,07,267 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 69% பேர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 31% மட்டுமே பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.