டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் உச்சத்தை தொட்டுள்ளார்!!!கிளைன் மெக்ராத் புகழாரம்…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த இவர், சவுதம்டனில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு பல வீரர்கள் சமூக வலைதளம் மூலம் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் உச்சத்தை தொட்டுள்ளார்.

ஆண்டர்சன் உயரிய தரத்தை நிர்ணயித்து இருக்கிறார். அவருக்கு நிகரான திறமை என்னிடம் கிடையாது. இரு புறமும் பந்தை கட்டுக்கோப்புடன் ஸ்விங் செய்வதில் அவரை மிஞ்ச முடியாது’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.