யூடியூப் பார்த்து வீட்டிலேயே சாராயம்…

கொடைக்கானல்: இந்தியா முழுவதும் ஊரடங்கால், மதுக்கடைகளும் சேர்த்து பூட்டப்பட்டுள்ளன. இதனால், குடிப்பிரியர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்தியா உட்பட உலகின் பல இடங்களிலும், கை கழுவும் சானிடைசைரை போதைக்காக குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கொடைக்கானலில், வீட்டிலேயே எப்படி சாராயம் காய்ச்சுவது என்று யூடியூப்பில் பார்த்து மது தயாரித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் போலீசுக்கு தெரியவரவே, சம்பந்தப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பள்ளங்கி அலத்துறை கிராமத்தை சேர்ந்த தினேஷ், வல்லரசு, பாண்டி, விரும்பாண்டி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.