பழைய அரசுப் பேருந்துகளை பெண்களுக்கான கழிவறையாக மாற்றி அசத்திய பெங்களுரு மாநகராட்சி!!
![](https://thambattam.com/storage/2020/08/EgaWV5oUYAMjEK0-780x470.jpg)
அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பழைய பேருந்துகளை புதிய மற்றும் பயனுள்ள வகையில் மாற்றும் திட்டத்தை பெங்களூரு மாநகராட்சி கண்டுபிடித்துள்ளது.
பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வரும் ஏராளமான பெண் பயணிகளுக்கு கழிவறை வசதியை உருவாக்கும் வகையில், இந்த பழைய பேருந்துகளை கழிவறைகளாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/adsfadsf-300x205.jpg)
அதன்படி, ரூ.12 லட்சம் செலவில் பழைய பேருந்துகளை மூன்று அறைகள் கொண்ட மகளிர் கழிவறைகளாக மாற்றி வருகிறது கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம். மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தின் முதல் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் பேருந்துகள் கழிவறைகளாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/EgbD6-EU4AENVVJ-300x169.jpg)
அதுமட்டும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தை காலியாக வைத்து அதில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவும், குழந்தைகளுக்கு துணி மாற்ற போன்றவற்றை மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் லஷ்மண் நேற்று தொடக்கி வைத்தார்.