“கட்சில சேர்ந்து முழுசா 2 நாள் கூட ஆகல..! பாஜகவில் இணைந்த அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
கோவையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை டெல்லியில், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று கோவையில் இருக்கும் பாஜக அலுவலகத்திற்கு அண்ணாமலை வருகை தந்தார். மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் மிகவும் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.
சித்தாபுதூர் பகுதியில் இருக்கும் பாஜக அலுவலகம் முன்பு நேற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டவிதிகளை மீறி கூட்டத்தைச் சேர்த்ததாக பா.ஜ.க.வினர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் மீது போலீசார் 143, 341, 269, 285 IPC r/w 3 of Epdamic Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.