தனியார் கல்லூரியின் சேர்க்கை பட்டியலில் சன்னி லியோன் பெயர்! அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் !!
![](https://thambattam.com/storage/2020/08/xzcxzCZXc-780x470.jpg)
கொல்கத்தாவில், பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர், தனியார் கல்லூரியின் சேர்க்கை பட்டியலில் முதலிடத்தில் இருந்துள்ள சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அசுடோஷ் எனும் தனியார் கல்லூரி நேற்று (ஆகஸ்ட் 27) தனது இணையதள பக்கத்தில் B.A ஆங்கில படிப்பின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்கு காரணம், அந்த பட்டியலில் பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்ததுதான். 9513008704 என்ற பதிவு எண்ணிலும், 207777-6666 எனும் வரிசை எண்ணிலும் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நடிகை சன்னிலியோன், 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த 4 பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
இது குறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம், “சன்னி லியோனின் பெயரில் யாரோ வேண்டுமென்றே தவறான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததுள்ளதாகவும், அதை சரிசெய்யுமாறு சேர்க்கை துறையிடம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://thambattam.com/storage/2020/08/sadas-300x72.jpg)
இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் பட்டியல் குறித்து சன்னிலியோன் ட்வீட் செய்துள்ளார். அதில், “உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், நீங்கள் எனது வகுப்பில் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.