விளையாட்டு துறை விருதுகளுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு: மத்திய அரசு

விளையாட்டு மற்றும் வீரத் தீர செயல்களுக்காக வழங்கப்படும் விருதுகளின் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்நாள், தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தியான் சந்த்தின் பிறந்தநாளையொட்டி, டெல்லி தியான் சந்த் தேசிய விளையாட்டு மையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
விளையாட்டு மற்றும் வீரத் தீர செயல்களுக்காக வழங்கப்படும் விருதுகளின் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை 15 லட்சம் ரூபாயாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத் தொகை 25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.