பாஜகவில் சேர்ந்த உடனேயே முக்கிய பதவியை பரிசாக பெற்ற அண்ணாமலை!
![](https://thambattam.com/storage/2020/08/Eglq-WtXkAAmvnG-780x470.jpg)
சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படுபவர் அண்ணாமலை. தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடக காவல்துறையில் பணியாற்றினார். ஆனால், திடீரென தனது ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகி, தற்சார்பு விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். அவ்வப்போது அரசியல் குறித்தும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பொறுப்பாளரான முரளிதர் ராவ் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவில் இணைந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்ணாமலையை தமிழக பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்து மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.