மனைவியின் ஆசைக்காக நிலத்தை விற்று, யானை வாங்கிய அன்புக் கணவன்!!

மனைவி ஆசைப்பட்டதால் நிலத்தை விற்று கணவன் யானை வாங்கியுள்ளார்.

வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொனிர்ஹித் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர பாய். இவரது மனைவி பெயர் துளசி ராணி தசி. துளசிக்கு கனவில் அடிக்கடி மிருகங்கள் வருவதுண்டாம். அவ்வாறு கனவில் ஏதாவது மிருகம் வந்துவிட்டால் அந்த மிருகத்தை விலை கொடுத்து மனைவிக்காக வாங்கி விடுவாராம் அன்பு கணவர் துலால். இதற்கு முன்பு குதிரை, அன்னம், ஆடு போன்ற மிருகங்கள் கனவில் வந்ததால் அவற்றையெல்லாம் மனைவிக்கு இவர் வாங்கி கொடுத்து விட்டார்.

இந்நிலையில் தனக்கு வந்த யானை கனவை பற்றி கணவரிடம் துளசி ராணி தசி கூறியுள்ளார். உடனே தன் மனைவி ஆசைப்பட்டு விட்டார் என்று நினைத்து யானை ஒன்றை விலைக்கு வாங்கி விட்டார். சந்திர ராய் தன்னிடமிருந்த 2 பிகா அளவுள்ள நிலத்தை விற்று 16.5 லட்சம் டாகா செலவில் அந்த யானையை வாங்கியுள்ளார்.

அந்த யானையை மவுல்லி பஜாருக்கு சென்று வாங்கியுள்ளார். யானையை ஏற்றி கொண்டு வர டிரக்கிற்கு மட்டும் 20,000 டாக்கா செலவு செய்துள்ளார் இந்த பாசக்கார கணவன். அத்துடன் யானையை பராமரிக்க ஒரு யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளார். யானையை உள்ளூர் மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x