“100 நாட்கள் 100 திட்டங்கள்; கேரள மக்களுக்கு ஓணம் பரிசு” – பினராயி விஜயன்

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. எனினும், கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல் இருக்கும்படி அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால், முன்புபோல் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று ஓணம் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனையும் மந்தம் ஆக உள்ளது. இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கேரளாவின் சமூக பொருளாதார நிலையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் 100 திட்டங்கள் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றி முடிக்கப்படும். இது கேரள மக்களுக்கு அரசின் ஓணம் பரிசாகும் என கூறியுள்ளார்.