“கொரோனாவால் ஏற்படும் உயரிழப்பை ‘LMWH’ மருந்தினால் தடுக்க முடியும்” – மருத்துவர்களின் நிம்மதி தரும் தகவல்..

கொரோனாவால் உலகின் பலநாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கொரோனாவால் ஏற்படும் உயரிழப்பை ‘LMWH’ மருந்தினால் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் 90 சதவீத உயிரிழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LMWH என்ற மருந்து ரத்தம் கெட்டியாவதை தடுத்து அதை மென்மையாக மாற்றக்கூடியது. கொரோனா நோயாளிகளின் இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றிற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் மிக நுண்ணிய ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
இதை கண்டுபடிக்க d-dimer என்ற பரிசோதனை நடத்தப்படும். கொரோனா நோயாளிகளுக்கு D-dimer அளவு அதிகம் இருந்தால், LMWH மருந்தினை செலுத்தி அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தினை நோயாளிகளுக்கு செலுத்துவதால் அவர்கள் மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டில்லியைச் சேர்ந்த மருத்துவர் யாடின் மேதா கூறுகையில், ‘D-dimer அளவு அதிகம் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்தினைச் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கிறது. சற்று கவலைக்கிடமான நோயாளிகளுக்கு அதிக அளவில் இம்மருந்தினை செலுத்த வேண்டியிருக்கும்’ என தெரிவித்தார்.
புனேயைச் சேர்ந்த டாக்டர் சுபால் திக்ஷித் கூறுகையில், ‘ இத்தாலி நாட்டில் கொரோனாவால் பாதித்து இறந்தவர்களின் போஸ்மாட்டம் ரிபோர்டில், அவர்கள் உடம்பின் முக்கிய பாகங்களில் உள்ள ரத்தகுழாய்களில் ரத்தக்கட்டிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே இம்மருந்தினால் கொரோனா உயிரிழப்பை வெகுவாக தடுக்க முடியும் என தெரிவித்தார்.