பாகிஸ்தானையும் வெளுத்து வாங்கும் கொரோனா பாதிப்பு !!!

pak_3107chn_1

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,78,305-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 903 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இது, கடந்த 3 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,78,305-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 27 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,951-ஆக அதிகரித்துள்ளது.

Mers Corona Virus, MERS-COV.3d rendering

இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,47,177 போ் குணமடைந்துள்ளனா். 1,146 கரோனா நோயாளிகளது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,20,550 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 92,873 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x