118 சீன செயலிகளுக்கு தடை: கடும் எதிர்ப்பை தெரிவித்த சீனா

இந்தியாவில் மேலும் 118 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதற்கு அந்நாடு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

காஷ்மீரின் லடாக் பகுதியில், இந்தியா – சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் சீனப் படைகள் அண்மையில் அத்துமீறின.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை‌ விதித்து மத்திய அரசு நேற்று தடை விதித்தது.

 

இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது ‍தொடர்பாக அந்நாட்டின் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன முதலீட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களின் நலனுக்கு எதிராக இந்தியா செயல்பட்டுள்ளதாகவும், செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x