உலக சர்வாதிகாரிகளுடன் மோடியை மறைமுகமாக ஒப்பிட்ட ராகுல்!

உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் “எம்” எழுத்தில் தொடங்குகின்றன என்று ராகுல் மறைமுகமாக மோடியை விமர்சித்துள்ளார்.
விவசாயிகள் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சட்டங்களை திரும்பப் பெற முடியாது என பிடிவாதம் பிடிக்கிறது. விவசாயிகளின் எதிர்ப்பால் ஆங்கிலேயேர்களே அவர்கள் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளனர் என காங்கிரஸ் ராஜ்யசபாவில் விமர்சித்துள்ளது.
இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல் டுவீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், “உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் “எம்” எழுத்தில் ஏன் தொடங்குகின்றன. மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், முபாரக், மோபுட்டு, முஷாரப், மிகோம்பிரோ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மோடியின் பெயரும் “எம்” எழுத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.