ஜெஇஇ தேர்வு எழுத போகும் மகனை ஏற்றிக் கொண்டு 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய தந்தை!

கொல்கத்தாவில் ஜெஇஇ தேர்வு எழுத போகும் மகனை ஏற்றிக் கொண்டு  தந்தை ஒருவர் 100 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

கோசாபாவினை சேர்ந்த தந்தையும் மகனும். அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு 20 கிமீ பேருந்திலும் பயணம் செய்துள்ளனர். செவ்வாய் காலை 5 30 மணிக்கு பயணத்தை தொடங்கிய ரபிந்தரநாத் மொன்டல் மற்றும் அவரது மகன் திகண்டா அடுத்த நாள் மதியம் தங்களது பயணத்தை முடித்துள்ளனர்.

முதல் கட்டமாக தங்களது கிராமத்தில் இருந்து 60 கிமீ பயணம் செய்து வியாதியை அடைந்தனர், அங்கிருந்த சிறிய ஆற்றினை படகு மூலம் கடந்துள்ளனர். இரவு முழுவதும் அங்கு ஒய்வு எடுத்தப்பின் காலை 8 மணிக்கு பயணத்தை மீண்டும் தொடங்கினர். இந்த முறை பயண தூரமான 50 கிமீ தூரத்தை மகனை பின்னே வைத்து கொண்டு தந்தை சைக்கிளை ஓட்டியுள்ளார்.  தேர்வின் போது மகன் சோர்வடைய கூடாது என்பதற்காக இப்படி செய்ததாக அவர் பின்னர் தெரிவித்தார்.

சோனார்பூரில் இருக்கும் தங்களது உறவினர் வீட்டில் சைக்கிளினை நிறுத்தி விட்டு இரண்டு பேருந்துகள் மூலம் தேர்வு நடக்கும் இடத்தினை அடைந்தனர். கூட்ட நெரிசல் மூலமாக கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதால் பயண தூரம் முழுவதும் பேருந்து மூலம் கடக்கவில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.

குடும்ப சூழ்நிலை காரணமாக இத்தேர்வினை கட்டாயமாக எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வருமானம் பெருமளவில் குறைந்துள்ள இந்த கடினமான காலத்தில் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து பொறியியல் கல்லூரியில் இடம் பிடிப்பேன் எனவும் அவர் கூறினார். தேர்வுக்கு பலரும் கார்களில் வந்தபோதும் சைக்கிளில் வந்த இந்த தந்தை மற்றும் மகன் பலருக்கும் முன்மாதிரியான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்!

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x