வரும் 7ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும்

சென்னையில் வரும் 7ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு 4.0இல் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. அதே போல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவையும் வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரயில்சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஏனென்றால் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தான் சென்னையில் உள்ள பெரும்பாலான தொழில்நிறுவனங்களில் மக்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் தினமும் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் மின்சார ரயில் இயக்கப்படாததால் புறநகர் பகுதி மக்களால் சென்னைக்கு வரமுடியவில்லை. இதனிடையே தொழில்நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கு மின்சார ரயில்சேவை தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் புறநகர் ரயில் தேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில்களை பகுதி அளவு இயக்க சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.