கடை பெயர் பிடிக்கல.. உடனே மாத்துங்க; சிவசேனா’க்கு பயந்து பெயரை பேப்பர் போட்டு மறைத்த உரிமையாளர்??

மும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் பெயரை மாற்ற சிவசேனா கட்சிதலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியதை அடுத்து கடையின் பெயரை உரிமையாளர் மறைத்தார்.
இது குறித்து கூறப்படுவதாவது: மும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் உரிமையாளர் தன்னுடைய கடைக்கு கராச்சி ஸ்வீட்ஸ்டால் என பெயரிட்டு இருந்தார். கடைக்கு வந்த சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான நிதின் நந்த்கோகர் கடையின் பெயரான கராச்சி என்பது பாகிஸ்தானை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதனால் கடையின் பெயரை மராத்தி என மாற்ற வேண்டும் என கூறினார்.
மேலும் சிவசேனா தலைவர் அடுத்த 15 நாட்களில் மீண்டும் கடைக்கு வருவதாகவும் அதற்குள்ளாக கடையின்பெயர் மாற்றம் குறித்த உதவிகளுக்கு பிர்ஹாம் மும்பை மாநகராட்சியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கடையின் உரிமையாளர் உடனடியாக தன்னுடைய கடையின் பெயரை பேப்பரின் மூலம் மறைத்துள்ளார்.