வீடு நிறைய கஞ்சா பொட்டலம்… போலீசிடம் வசமாக சிக்கிய இளைஞர்கள்!
![](https://thambattam.com/storage/2020/09/ecc22ef0f9b81b4c09e006cfcc4bdda7e694d755ca202c61ff9bb750790e4f25.jpg)
மதுரையில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த மூவரை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், கஞ்சா புழக்கத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி மதுரையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தபோது, ஆனையூர் மல்லிகை நகர் பகுதியில் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
![](https://thambattam.com/storage/2020/09/6e8dec944fffdc915040f029f17eff8272e0c5e904d8ee8570a8e871bd3aa7ed-300x199.jpg)
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். இளைஞர்கள் ஏராளமானோர் ஒரே வீட்டில் தங்கியிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் சென்றப்போது வீட்டில் இருந்த இளைஞர்கள் அனைவரும் தப்பியோடினர். பின்னர் குறிப்பிட்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தப்போது சுமார் 22 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த வீட்டில் வைத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் கஞ்சா வியாபாரி பிரதீப் மற்றும் கண்ணன், சுதாகர் ஆகிய மூவரையும் கைது செய்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய 13 பேரை தேடிவரும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.