64 லட்சத்திற்கும் மேலாக,தமிழக அரசு வேலைவாய்ப்பு பக்கத்தில் குவிந்த விண்ணப்பங்கள் !!!

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத நிலவரப்படி 64.12 லட்சமாக உள்ளது.
இதற்கான புள்ளி விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் மேல் இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 64 லட்சத்து 12 ஆயிரத்து 327. அவா்களில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 7 ஆயிரத்து 813 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 798 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் 23 லட்சத்து 39 ஆயிரத்து 630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிா்வு பெற்ற பதிவுதாரா்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளனா்.
மாற்றுத் திறனாளிகளும் தனியாக தங்களது பதிவுகளைச் செய்துள்ளனா். அதன்படி, ஆண்கள் 87 ஆயிரத்து 323 போ, பெண்கள் 45 ஆயிரத்து 282 போ என ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 605 போ உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.