விடுதலைப்புலிகள் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு கமிஷனில் (பி.ஓ.ஏ.சி.) மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
பி.ஓ.ஏ.சி.யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த கமிஷனில் இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.