ஜப்பானின் ஹைஷேன் சூறாவளியில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயம்!
ஜப்பானின் கைஷு தீவினைத் தாக்கிய ஹைஷேன் சூறாவளியின் காரணமாக நால்வர் மாயமானதுடன், மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜப்பான் நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: “கடுமையான புயலுக்கு இணையான ஹைஷேன் சூறாவளி மற்றும் தொடர் மழையின் காரணமாக மின்சாரத் துண்டிப்பு மற்றும் கடுமையான போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கைஷு தீவினைச் சேர்ந்த ஆறு முக்கிய நிலப்பிரதேசங்களில் வசிக்கும் ஏறக்குறைய 8,70,000 மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 580 உள்ளூர் விமான சேவைகள் மற்றும் ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது மணிக்கு 50 கிமீ வேகத்துடன் ஹைஷேன் சூறாவளியானது கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி பயணிக்கிறது. அப்போது மணிக்கு 180 கிமீ வேகம் வரை கடுமையான காற்று வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் எசசரிக்கையாக இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் கைஷு தீவினைத் தாக்கிய ஹைஷேன் சூறாவளியின் காரணமாக நால்வர் மாயமானதுடன், மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.