51 லட்சம் கடனுக்கு 80 லட்சம் வட்டி கட்டிய வாடிக்கையாளர் – ஆடியோ உன்மையா?

சமீபத்தில் வங்கி அதிகாரி ஒருவருடன் வீட்டு கடன் பெற்ற மருத்துவர் பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதில் ரூ.51 லட்சம் வீட்டு கடனுக்கு 14 ஆண்டுகளாக மாத தவனை மூலம் ரூ.94 லட்சம் செலுத்தியிருந்தாலும், ரூ.14 லட்சம் மட்டுமே அசலில் கழிந்திருப்பதாகவும், பாக்கி ரூ.80 லட்சம் வட்டியில் சேர்ந்துவிட்டதாகவும் வங்கி அதிகாரி கூறுவார்.

இந்த ஆடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்து இன்சூரன்ஸ் துறையில் இருப்பவரும், அது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருபவருமான ‘பாஸ்டன்’ ஸ்ரீராம் ஒரு பதிவொன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அந்த வீட்டுக்கடன் பற்றி கூறப்பட்ட தகவல்கள்

கடன் 51 லட்ச ரூபாய்

கடன் வாங்கிய ஆண்டு 2006

வட்டி விகிதம் 14.75%

உரையாடல் நடைபெற்ற ஆண்டு 2020

கடனுக்கு டாக்டர் கட்டும் இஎம்ஐ – 57 ஆயிரத்து சம்திங்.

இதுவரை கட்டிய தொகை 94 லட்ச ரூபாய்

கடனின் தற்போதைய அவுட்ஸ்டாண்டிங் : 40 லட்ச ரூபாய்

ஆடியோவை உருவாக்கியவர்கள் கொண்டையை மறைக்க மறந்ததாக நான் நினைப்பதன் காரணங்கள்

1.) சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட அதே ஆண்டு அதே வங்கியில் நானும் வீட்டுக் கடன் பெற்றேன். அந்தக் கடனின் டிஸ்பர்ஸ்மெண்ட் லெட்டர் கொண்ட இமெயில் இன்னும் என்னிடம் உள்ளது.

எச்டிஎஃப்சி 2006ஆம் ஆண்டு Variable Interest Home Loanக்கு வசூலித்தது 10.25% – ஆடியோவில் சொல்லப்பட்டது போல 14.75% அல்ல.

2.) இப்போது வழங்கப்படுவது போல 30 ஆண்டுகால வீட்டுக்கடன் 2006இல் வழங்கப்படவில்லை. என் நினைவு சரி என்றால் அப்போது அதிகபட்ச வீட்டுக்கடன் காலம் 20 ஆண்டுகள். 51 லட்ச ரூபாய், 14.75% வட்டி, காலம் 20 ஆண்டுகள்னு போட்டால் இ.எம்.ஐ ரூ.66,216 கட்டியிருக்கணும். 30 ஆண்டுகாலம் இருந்ததாகவே வைத்துக் கொண்டாலும் இ.எம்.ஐ ரூ.63,468 கட்டியிருக்க வேண்டும்.

3.)  20 ஆண்டு கணக்கும் சரியா வரல, 30 ஆண்டு கணக்கும் சரியா வரவில்லை என்று எக்சலில் கணக்கு போட்டால் தான் தெரிகிறது 57000 ரூபாய் இ.எம்.ஐ கட்டினா 30 ஆண்டுகள் அல்ல 300 ஆண்டுகள் கட்டினாலும் இந்தக் கடன் அடையவே அடையாதென்று.

51 லட்சம் கடன், வட்டியோ 14.75% – முதலாண்டு வட்டி 7,52,250 ரூபாய் அதாவது மாசத்துக்கு 62687 ரூபாய். வட்டி 62 ஆயிரத்துக்கும் மேல இருக்கும் போது இஎம்ஐ வெறும் 57 ஆயிரம் கட்டினா என்ன ஆகும்? கடன் உயர்ந்து கொண்டே போகும்.

4.) 51 லட்சம் கடன் 14.75% இல் வாங்கி விட்டு 14 ஆண்டுகள் மாதாமாதம் வெறும் 57 ஆயிரம் கட்டினா அசல் 40 லட்சமாக குறைந்திருக்குமா? தப்பா கணக்கு போட்டால் குறையும். உண்மையில் அசல் வாங்கினதை விட உயர்ந்திருக்கும். வங்கி இப்படியெல்லாம் கணக்கு போட வாய்ப்பில்லை

இவையே ஆடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்றன. இந்தப்பதிவின் மூலம் நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இந்தியாவில் உள்ள வங்கிகளின் சேவை குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. வட்டி விகிதம் ஏறும் போது அடுத்த நாளே அதைச் செயல்படுத்தும் வங்கிகள் நாட்டில் வட்டி விகிதம் குறையும் போது மட்டும் எழுதிக் கொடு, கட்டணம் கட்டு என்று கூறுவது சரியல்ல.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x