‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலானதை தொடர்ந்து கீழ்த்தர அரசியலில் இறங்கிய எச்.ராஜா!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் தீயாக பரவி வருகிறது. திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் உடைகளை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியது.

இந்த ஹேஷ்டேக்கு திமுகவினர் ஆதரவு அளிக்க, ஒரு கட்டத்தில் சமுகவலைதளமெங்கும் இந்த ஹேஷ்டேக்காக காணப்பட்டது. இதனால் கடுப்பின் உச்சத்தில் இருந்த பாஜகவினர் திமுகவுக்கு எதிராக ‘திமுக வேண்டாம் போடா’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர்.

அதைவிட இப்போது கீழ்த்தரமான, அரசியல் நாகரீகமற்ற செயலில் இறங்கியுள்ளனர். அதாவது, திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக, ‘ஆக மேத்ஸ், பிசிக்ஸ், அறிவியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாது போடா’ என அவர் புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பதிவிட்டு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘வர வர மக்கள் ரொம்ப கிரியேட்டிவ் ஆக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்’ எனப் பகிர்ந்துள்ளார். ஒரு கட்சியின் தேசிய செயலாளரே இப்படி இறங்கி இருப்பது மக்களின் முகம் சுளிக்க வைத்துள்ளது. எச். ராஜாவின் இந்த கீழ்த்தரமான பதிவுக்கு மக்களும் தங்களுடைய எதிர்ப்பினை அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.