“மாற்றுவதற்கு நான் தயார்.. நிறுத்துவதற்கு அவர்கள் தயாரா?” – ட்வீட் போட்ட பிரபல இயக்குநர் லிங்குசாமி

பிரபல இயக்குநர் லிங்குசாமி தான் முகக்கவசத்தை மாற்ற தயாராக உள்ளதாகவும் ,ஆனால் அவர்கள் விற்பனை செய்வதை நிறுத்தவேண்டும் அல்லவா..? என்று முகக்கவசம் பற்றி தனது டிடிவிட்டர் பக்கத்தில் வினைவியுள்ளார்.
பல மாதங்களான பூட்டுதலில் இருந்த நமது நாடு தற்போது பல தளர்வுகளை பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மாவட்டம் கடந்த போக்குவரத்துக்கு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 42.80 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோல 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 42,80,423 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,775 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,83,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 33,23,951 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட சில வகை முகக்கவசங்கள் தற்போது தடைசெய்யப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து பிரபல இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “வைரஸை பரவுவதற்கு வழிவகுப்பதாக கூறி ஒரு குறிப்பிட்ட வகை முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஒரு மருத்துவமனை தெரிவிக்கின்றது. ஆனால் அதே மருத்துவமனை அதே முகக்கவசத்தை விற்பனையும் செய்கின்றது. நான் முகக்கவசத்தை மாற்ற தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் விற்பனை செய்வதை நிறுத்தவேண்டும் அல்லவா..? என்று வினைவியுள்ளார்.
I was asked to change this Particular mask at a hospital as it helps in spreading the virus. But, The same hospital sells this mask too. Am ready to change the mask but first they have to stop selling it .. Right ?? pic.twitter.com/iUW1VLqbBH — Lingusamy (@dirlingusamy)
September 8, 2020