சாத்தான்குளம் கைதி மகேந்திரன் நெஞ்சு வலியால் இறந்தார் – சிபிசிஐடி

சாத்தான்குளம் காவலர்களால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு முன்பாக மகேந்திரன் என்பவர் கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவர் நெஞ்சு வலியால் இறந்ததாக சிபிசிஐடி கூறியுள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். லத்தியை உள்ளுறுப்புகளில் செலுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட்டதால் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருவர், காவலர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை, கடந்த வாரம் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற வேண்டிய ஸ்ரீதர் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இவ்வழக்கு பூதாகரமான போது, தனது மகனையும் இதே காவலர்கள் கஸ்டடியில் எடுத்து அடித்து கொன்றுவிட்டனர் என மகேந்திரன் என்பவரின் தாய் நீதிமன்றத்தை நாடினார். சிபிசிஐடி அவ்வழக்கை விசாரித்தது. இன்று சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ‘‘மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளது.