ஹிந்தி தேவையில்லை கொரியா பல்கலை முடிவு

தென்கொரியாவின் புஸான் பல்கலை, ஹிந்தி மொழி பயிற்றுவிப்பதை படிப்படியாக கைவிட முடிவு செய்துள்ளது. 

‘இந்தியாவில் படிக்கவோ, வேலை பார்க்கவோ, சுற்றுப்பயணம் செய்யவோ விரும்புவோருக்கு, ஆங்கிலமே போதும்; தனியாக ஹிந்தி படிக்க அவசியமில்லை’ என்பது பல்கலையின் முடிவுக்கு முக்கிய காரணம். 

ஹிந்தி மொழி படிப்பை கைவிடும் முடிவுக்கு பல்கலையின் இந்திய படிப்புத்துறை மாணவர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

கொரோனா தொற்றுக்கு எதிரான நடைமுறைகள் காரணமாக, மாணவர்கள் கூடுவதற்கு நடத்த தடை உள்ளது. அதனால், போராட்டம் நடத்தாமல், சமூக வலைதளங்களில் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x