சீனாவில் இருந்து தப்பியோடிய ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள்!!

கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் ஆஸ்திரேலியா-சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆஸ்திரேலிய அரசு இணையதளங்களில் சைபர் தாக்குதல், வர்த்தகம் மோதல் போன்றவற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பெரும் விரிசலை சந்தித்துள்ளது.

இதற்கிடையில், சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.

இறுதியாக அந்த ஆஸ்திரேலிய பெண் செய்தித்தொகுபாளர் ஷேங் லி-யை சீன போலீசார் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கைது செய்திருப்பது தெரியவந்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஷேங் லி எந்த விதத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற தகவலை சீனா தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ஏபிசி மற்றும் ஏஎப்ஆர் ஆகிய செய்தி நிறுவனங்களின் கிளைகள் சீனாவிலும் உள்ளது. இந்த கிளைகளின் முக்கியப்பொறுப்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் சீனாவில் தங்கி தங்கள் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. ஆகையால் இருவரும் சீனாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இது தொடர்பாக சீன அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 5 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல சீனா அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியையடுத்து தூதரக உதவியுடன் சீனாவில் இருந்து தப்பித்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய 2 பத்திரிக்கையாளர்களும் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

இந்த சம்பத்தை தொடர்ந்து சீனாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x