அடுத்தடுத்து நடந்த அவலம்.. ஆம்புலன்ஸ் டிரைவர்களால் இளம்பெண்கள் பலாத்காரம்!! புதிய கட்டுப்பாடுகள்

கேரளாவில் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண், சில நாட்களுக்கு முன் டிரைவரால் நடுவழியில் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அதேபோல், கொரோனா நெகட்டிங் சான்றிதழ் பெற சென்ற பெண்ணும் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்சுகளுக்கு கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாகனங்களில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக, வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே கேரள அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
* ஆம்புலன்சு்களில் கருப்பு ஸ்டிக்கர்களை நீக்க வேண்டும், திரைகள் போடக் கூடாது.
* இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* டிரைவர், ஆம்புலன்ஸ் பற்றிய விபரங்கள், அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழங்கப்பட வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போலீசிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
* ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.