வங்கிகளில் கடன் தவணைக்கான கால அவகாசத்தை மேலும் நீடிக்க வாய்ப்பில்லை

கடனுக்கான தவணையை வங்கிகள் வசூலிக்காமல் நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை, ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம் நாளையுடன் நிறைவடையுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஹெச்டிஎப்சி, கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள், கடன் தவணையை நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநரை கேட்டுக் கொண்டிருந்தனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு சலுகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.