வேகமாக ஓட்டப்படட கார்; ஓட்டுனர் கூறிய கேவலமான காரணம்!

இயற்கையின் அவசர அழைப்புகளுக்கு எல்லோரும் பதிலளித்துதான் ஆக வேண்டும். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த காரணத்தை, தனது தவறை நியாயப்படுத்த, போலியாக ஒருவர் பயன்படுத்திய சம்பவம், போலீசாரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
லண்டன் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர், காரில் 185 கிமீ வேகத்தில் சென்றதற்காக, சமீபத்தில் போலீசாரால் பிடிக்கப்பட்டார். வேக வரம்பை விட 45 கி.மீ வேகத்தில் கூடுதலாக, வேகமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு அந்த ஓட்டுனர் கூறிய காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
லண்டனில் இருந்து வாகனம் ஓட்டி வந்த அந்த நபர், “எனக்கு அர்ஜன்டாக இயற்கை உபாதை ஏற்பட்டது. அதற்காக, கழிப்பறைக்குச் செல்ல தேடினேன். ஆனால், கிடைக்கவில்லை. வேகமாக ஓட்டிக்கொண்டு போனேன்.” என்று சொன்னார்.
எனினும், அவர் வாகனத்தில் வசதியாக, முகத்தில் எந்த பதற்றமும் இன்றி, உட்கார்ந்திருப்பதைக் கவனித்த போலீசார், அந்த நபரின் விளக்கத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து, அவருக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.