மகன்களின் சம்மதத்துடன் 55 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 70 வயது முதியவர்!

மத்திய பிரதேசத்தில் 70 வயது முதியவர் ஒருவர் 55 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உம்ராவ் சிங் (வயது70) மற்றும் குடிபாய் (வயது 55) ஆகியோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேரின் படுக்கைகளும் அடுத்தடுத்து இருந்ததால் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின், மூன்று நாள்களில் காதலிக்க ஆரம்பித்தனர். சிகிச்சை முடிந்தபின் உம்ராவ் தனது சொந்த ஊரான பூராகேடி கிராமத்திற்கு குடிபாயை அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தனது 4 மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளிடம் குடிபாயை திருமணம் செய்து கொள்ள அனுமதி வாங்கினார். பின் கிராம மக்கள் முன் புத்தாடை அணிந்து மேளதாளத்துடன் மக்கள் நடனமாட திருமணம் நடைபெற்றது.