அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க அதிபர்… ஆச்சரியம் அளித்த நோபல் கமிட்டி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதாக நோபல் பரிசு உள்ளது. நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தன மனதில் பட்டதை அப்படியே பேசும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான பிரச்னையில் தலையிட்டு சமாதான முயற்சி மேற்கொண்டதற்காக ட்ரம்ப்பை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே பரிந்துரைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை தனது பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கெஜெடே, “இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ந்து அமைதியை நிறுவ ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனுடனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து அவரை நோபல் பரிசுக்கு கெஜெடே பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x