“சீனாவிலிருந்து எல்லை தாண்டி எவரேனும் வந்தால் கண்டதும் சுடுங்கள்!” அதிரடி உத்தரவு போட்ட அதிபர்!

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட அந்நாடு உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்துள்ளதாவது; “கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை மூடியது. வடகொரியா. தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் அமல்படுத்தியது. இந்நிலையில் சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிப்படைந்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வடகொரியாவில் மட்டும் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படையவில்லை என தொடர்ந்து அந்த நாட்டு அரசு தெரிவித்துவருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x