முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் இயற்கை எய்தினார்..

முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சுத் திணறல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மனைவி சமீபத்தில் இறந்த பின்பு, அவர் தமது இரண்டு மகன்களுடன் பாட்னாவில் வசித்து வந்தார்.

இதனிடையே வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பாட்னாவிற்கு எடுத்துவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

74 வயதான ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x