7 மாத கால இடைவெளியில் இந்தியாவில் பதிவான 400+ நிலநடுக்கங்கள்!

தேசிய நில அதிர்வு மையம் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்களை பதிவு செய்ததாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புவியியல் அமைச்சகம் மாநிலங்கவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. அதில், 135 நிலநடுக்கங்கள் 3.0 ரிக்டர் அளவிற்கு குறைவாகவும், 153 நிலநடுக்கங்கள் 3.0 முதல் 3.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.
மேலும், 114 நிலநடுக்கங்கள் 4.0 முதல் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது, இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 11 நிலநடுக்கங்கள் மட்டுமே 5.0 முதல் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதில் பழைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.