“அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், ஆயிரம் மடங்கு பதில் தாக்குதலை ஈரான் சந்திக்கும்!” எச்சரித்த டிரம்ப்!!
எங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், ஆயிரம் மடங்கு பதில் தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என, டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தொடுக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் இரு நாடுகள் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ”பத்திரிகைகள் அளித்த தகவலின்படி ஈரான் அமெரிக்கத் தூதரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.