கொரோனா மரணத்தில் ‘பொய்க்கணக்கு’– ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வரும் அரசு, இதில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை என்று தெரிவித்து வந்தது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 444 பேருடைய விவரம் விடுபட்டுவிட்டததாக கூறி, பலி எண்ணிக்கையில் அதை சேர்த்துள்ளது.
இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அரசை எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், “ மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பாதிப்பு எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டு வரும் அரசு, தற்போது உயிரிழப்பு பட்டியலில் 444 பேரை சேர்க்கிறது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பொய்யான தகவலை அரசு அளித்து வருகிறது.
கணக்கில் வராத மரணங்கள் என்று ஜூன் மாதத்திலேயே நான் பேச தொடங்கினேன், ஆனால் மரணத்தை வைத்து அரசியல் செய்வதாக என்னை ஆளுங்கட்சி விமர்சித்து விட்டது. மரண விவகாரத்தில் முதல்வர் பொய் சொல்லிருப்பதால், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.