கோயம்பேடு சந்தை திறக்க கோரிக்கை

கோயம்பேடு சந்தையைத் திறப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மே 5-ம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு சந்தை, தற்காலிகமாக திருமழிசை பகுதியில் இயங்கி வருகிறது. இதனிடையே நான்கு நாட்கள் பெய்த மழையால், திருமழிசை சந்தையும் சேதமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பேசிய அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜீ.டி.ராஜசேகரன், திருமழிசையில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி வியாபாரிகள் தவித்து வருவதாகவும், எனவே அமைச்சரவைக் கூட்டத்தில் கோயம்பேடு மார்கெட் திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.