2021 துவக்கத்தில் இந்தியாவில் தடுப்பூசி; மத்திய அமைச்சர் நம்பிக்கை
இந்தியாவில் 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “இந்தியாவுக்கு 2021 முதல் பாதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கக்கூடும்” என, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், “மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது மூன்று தடுப்பூசி வகைகள் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு அதைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.