1 கோடி லஞ்சம் கேட்ட அதிகாரி; ஆவணங்கள் சிக்கியதையடுத்து சிபி.ஐ. வழக்குப் பதிவு..

மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஸ்டீல் ஒர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் மோயுக் பாதுரி. இவர் வாரணாசியில், வர்த்தக வசதி மையம் மற்றும் கலை அருங்காட்சியகம் கட்டும் பணிக்கான டெண்டரை ஒதுக்கி தருவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஷில்லியன் இன்பிரா நிறுவன அதிகாரி ஆனந்த் சக்சேனா என்பவருடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த விஜய் நிர்மாண் லிமிடெட் நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டரை முடிக்க பணம் வாங்கிக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் விஜய் நிர்மாண் நிறுவனத்தில் இருந்து ஆனந்த் சக்சேனா வழியாக முதல் கட்டமாக ரூ.50 லட்சம் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியது. இதையடுத்து பாதுரி மீது சிபி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.