மெக்காவிற்கு செல்ல பச்சைக் கொடி காட்டிய சவுதி அரசு!!

கொரோனா தொற்று காரணமாக மெக்காவுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசின் உத்தரவு படி தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மெக்காவிற்கு யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது. இதில், முதல்கட்டமாக அரபு அமீரகத்தைச் சேர்ந்த 6 பேர் தினமும் அனுமதிக்கப்படுவர்.

நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல், வெளிநாட்டுப் பயணிகளை அனுமதிப்பதாகவும், அப்போது 20 ஆயிரம் பேர் வரை செல்லலாம் என்று அமைச்சம் கூறியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித கடமையாக கருதப்படும் மெக்காவிற்கு இந்த ஆண்டு, பக்ரீத் தினத்திலும் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதிக்கும் நாடுகளில் இருந்து யாத்ரீகள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.