தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்த சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ காற்று வீசத்தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x