சிறையில் தனி சமையல்; சசிகலாவுக்கு கொரோனாவா?

சிறையில் சசிகலாவுக்கு தனியாக சமைத்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அப்போது 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் கொரோனா தொற்று காரணமாக சசிகலா, இளவரசி ஆகியோர் தனியாக சமைத்து சாப்பிடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சிறையில் தனியாக சமைத்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் சசிகலாவுக்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக புகார் எழ, உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது.