திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்!

லண்டனை சேர்ந்த மணப்பெண் தனது திருமணத்தன்று, முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாத்தாவை 300 கிலோ மீட்டர் பயணம் செய்து சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

லண்டனில் கிரஹாம் பர்லி எனும் முதியவர் தனது குடும்பத்திலிருந்து விலகி பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ்க்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரால் தனியாக பயணம் செய்ய முடியாததால் தனது பேத்தியின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. அவர் மிகவும் வயதானவர் என்பதோடு அவருக்கு ‘பார்கின்சன்’ என்ற நடுக்குவாத நோயும் உள்ளது.

இந்த அறுவை சிகிச்சை நிபுணரான அலெக்ஸ் பியர்ஸ் தனது தாத்தா விடயத்தில் ஒரு முடிவெடுத்தார். அதன்படி பொதுவாக திருமணமான புதுப்பெண்கள் திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கோ அல்லது  தங்களின் புகுந்த வீட்டிற்குகோ செல்வது வழக்கம்.

ஆனால் அலெக்ஸ் தனது கணவருடன் திருமண உடையில் 320 கி.மீ.பயணம் செய்து தாத்தாவின் இடத்தை சென்றடைந்தார். அங்கு திடீரென தாத்தா கிரஹாம் முன்னர் தம்பதி நின்ற போது இதை எதிர்பார்க்காத அவர் அதிர்ந்துபோனார். இத்தகைய ஒரு நன்நாளில் கொரோனா காரணமாக தனது பேத்தியை கட்டி அணைக்கும் வாய்ப்பை அவர் இழந்திருந்தாலும் ஆனந்த கண்ணீர் பொங்க மூன்று பேரும் உணவு மற்றும் கேக் சாப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x