அதிகவரி விதிப்பால் இந்தியாவிலிருந்து வெளியேறும் பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனம்!
அமெரிக்கா மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் உலக அளவில் பிரபலமான பிராண்டுகளை வழங்குகிறது. இந்தியாவிலும், ஹரியான மாநிலம் பவால் பகுதியில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் வாகனங்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் அதன் சந்தைப்படுத்துதலை நிறுத்திக்கொள்வதாக முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் அதிக வரிவிதிப்பே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வெளிநாட்டு பொருட்கள் உற்பத்திக்கு பெருத்த அடியாக இருக்கும். ஆனால், இந்த நிறுவனத்தின் வாகனங்கள் தற்போது பலரும் பயன்படுத்தி வருவதால் டீலர்களின் ஒப்பந்த கால அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் தொடர்ந்து வழங்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது.
மேலும், எதிர்கால ஆதரவிற்காக ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருப்பினும் உதிரிபாகங்கள் விற்பனைக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது ஹார்லி நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், இந்த மாற்றத்தை கொண்டு பணிநீக்கம் மற்றும் பவால் ஆலை மூடல் ஆகியவற்றை அந்நிறுவனம் முன் வைத்துள்ளது.
ஹார்லி டேவிட்சனின் பவால் ஆலை 2011ல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.