மணல் கொள்ளையால் தடையுறும் அகழாய்வு பணிகள்.. கலெக்டர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சிவகங்கை கலெக்டர் கீழடி அகழாய்வு பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அகரத்தில் கண்டறியப்பட்ட உறைகிணறு இதுவரை 21 அடுக்குகள் வரை உள்ளது. இதுமேலும் கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கீழடியில் ஆமை வடிவ அச்சு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் சிறிய கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அச்சின் மேற்புறம் மூன்று சிறிய கோடுகள் உள்ளன. இந்த உருவம் ஆமையை குறிப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மேலும் பெண் முகம் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பெண் முகம் கொண்ட அச்சில் பெண்கள் காதணிகள் கொண்டவர்களாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், சிவகங்கை கலெக்டர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து புகைப்படத்துடன் கூடிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை அக்.13க்கு தள்ளி வைத்தனர்.