தலைநகரம்

கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்க அதிக ஆதரவு!!

மண் ஃபவுண்டேசன் நடத்திய கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்க அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தின. ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் 234 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில், அதிமுகவுக்கு ஆதரவாக 50.2 சதவீதம் பேரும், திமுகவுக்கு ஆதரவாக, 35.6 சதவீதம் பேரும், பிறகட்சிகளுக்கு ஆதரவாக 14.2 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் அடுத்த முதல்வராக யார் ஆக வேண்டும் என்ற கேள்விக்கு, ஓபிஎஸ்க்கு ஆதரவாக, 28.7 சதவீதம் பேரும், இபிஎஸ்க்கு ஆதரவாக 27.9 பேரும் , மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 26.6 சதவீதம் பேரும், ரஜினிக்கு 6.9, சதவீதம் பேரும், அன்புமணிக்கு ஆதரவாக 6.2 சதவீதம் பேரும், கமல்லுக்கு 3.7 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.

அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம் என்று 76.5 சதவீதம் பேரும், ஜெயலலிதாவின் செல்வாக்கு என்று 23.5 சதவீதம் பேரும்,, அதிமுகவின் பலவீனம் என்ற கேள்விக்கு இரட்டைத்தலைமை என்று 65.4 சதவீதம் பேரும், ஆளுமையற்ற நிலைமை என 34.6 சதவீதம் பேரும் பதிலளித்திருந்தனர்.

அதிமுகவில் எந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்ற கேள்விக்கு, ஒற்றைத்தலைமை கொண்டு வர வேண்டும் என்று 75.4 சதவீதத்தினரும், சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று 19.3 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் பலம் எது என்ற கேள்விக்கு, உதயசூரியன் சின்னமே என்று 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக் கோப்புதான் காரணம் என 21.4 சதவீதம் பேரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பலவீனம் என்ற பார்வையில், 66.2 சதவீதம் பேர் கருணாநிதி இல்லாததை ஒரு காரணமாகவும், 33.8 சதவீதம் பேர் தலைமை சரியில்லை என்பதை மற்றொரு முக்கிய காரணமாகவும் கூறியுள்ளனர்.

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு , மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவீதமும், வருகையே தேவையற்றது என 27.4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x