மேகலாயா நிலச்சரிவில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை பலி!!

தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம் மவ்னி, கிழக்கு காசி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வீடுகளின் மேல் மண் சரிந்ததில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.30 வயதான ரசியா அகமதுவின் உடல் குப்பைகளில் இருந்து மீட்கப்பட்டது. ரசியா அகமது பல தேசிய போட்டிகளில் மேகாலயாவுக்காக விளையாடியுள்ளார். இயற்கை பேரழிவால் உயிரிழந்த அவருக்கு ரசியாவின் அணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .