எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு காவல்துறை மரியாதை!! – பாரதிராஜா உருக்கம்

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டு காலம் தாலாட்டிக் கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
விலைமதிப்பில்லாத அந்த இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும். இதனை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதலமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும், இசை ரசிகர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரும், தமிழக முதலமைச்சரும் கலைத்துறையினர் மீது எந்த அளவுக்கு அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு என தெரிவித்துள்ளார்.